பாக்கம் கிராமத்தில் எங்கள் நாட்டு நலப்பணி முகாம்,
கடந்த நாட்களுள் மிகவும் பசுமையான நாட்கள்.
கடைசீ நாள் ஒன்றாகக் கிளம்பி ஒவ்வொருவராக பிரிந்த போது எங்கள் மனநிலை................
வார்த்தைகளாய்.........
விண்வெளி போதாது என் பிரிவினைக் கூற
ஆழ்கடல் கொள்ளாது என் கண்ணீரின் அளவை
பூம்புனல் வீசிய மாசி மாத மாலையில்
எங்கள் நட்புக்கூட்டின் உஷ்ணப் பிரிவு
நட்பால் தொடுக்கப்பட்ட ஐம்பது மலர்கள் உதிர்க்கப்பட்டன -
அவைகளின் கண்ணெதிரிலேயே
கடைசி ஒரு மணிநேரத்தில் முதல் பத்து நாட்களின் இறுக்கம் தெரிந்தது
வாய்வழியாய் வார்த்தைகள் இல்லை வேதனையைச் சொல்ல
கைக்குலுக்கி வழியனுப்பக் கடும் நெஞ்சம் இல்லை எங்களுக்கு
எத்தனையோ கோபமான வார்த்தைகள் கண்டோம்
பசித்த வயிரோடு நண்பன் உண்டதால் வயிராரினோம்
ஒற்றைப் போர்வையில் ஒங்கிய குளிரில் ஒன்பது பேர் உறங்கினோம்
பேய்கள் உறங்கும் நேரத்திலும் பேசிக்கொண்டிருந்தோம்
ஆனால் எங்கள் மலர்ச்சரத்தின் முதல் மலர் உதிர்ந்தபோதுதான்
உணர்ந்தோம்; பிரிவின் வலியை; உறவின் விலையை
கண்கள் அழுதன; காதல் இல்லை எங்களுள்; காசு பணம் தேவையில்லை எங்களுக்கு
கடைசி வரை நண்பா நீ இரு அது போதும் என்றன ஒவ்வொரு உதடுகளும் ஊமை மொழிகளில்
இறுதி மலர் அருந்தபோது முதல் மலரின் பாதச் சுவடுகள் கண்ணீரால் வழித்தடம் பதித்தது கண்டோம்
நட்சத்திரங்களை விட எங்கள் நட்பு வியப்பானது...
ஏனெனில் நாங்கள் பகலில் கூடி இரவில் கலைந்தோம்...
பாரத்தோடு சொல்கிறேன், என் எதிரிக்கும் நட்பின் பிரிவு வேண்டாம் என்று !
Friday, December 14, 2007
Subscribe to:
Posts (Atom)